Thursday, January 9, 2020

Baar baar dekho , DARBAR hazar baar dekho, Ke Dekh ne ki cheez hai hamaari DARBAR , Dekhlo oh oh

*ஆதித்ய அருணாசலம்* ....
பெயரிலேயே நெருப்புகொண்ட ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர்...

போதைப்பொருட்கள் அதிகம் இருக்கும் மும்பை பகுதியை சுத்தப்படுத்த அனுப்ப படுகிறார். அதில் வரும் பிரச்சனைகளை  எதிர் கொள்வதுதான் கதை.

முருகதாஸ் அணு அணுவாக ரசித்து செதுக்கி, நம்மையும்் மெய் மறந்து ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்.

வசனம் ஒவ்வொன்றும் அவ்வளவு பன்ச்...

குறிப்பாக "எம்ஜிஆர் 3 தடவை அடி வாங்கிட்டு அப்புறம் தான் சண்டை போடுவார் .. ஏன் தெரியுமா?"

ஒளிப்பதிவு ரஜினி நடை போல்.. சும்மா கலக்கல் ..

சண்டைக்காட்சி அத்தனையும் அருமையான ஸ்டைல்
இரண்டாவது பகுதியில் திருநங்கைகளின் பாடலுக்கெற்ப அமைக்கப்பெற்ற சண்டைக்காட்சி அடிதூள்..

பின்னணி இசை கிழி  கிழி.. bgm காட்சிகளுக்கும் வசனத்துக்கும் வலு சேர்த்தது ... பாடல்கள் பல வேறு இடங்களில் வந்து எழில் கூட்டுகிறது.

படத்தின் முக்கிய கதாபாத்திரம் வள்ளியாக வரும் நிவேதா தாமஸ்..நம் பக்கத்துவீட்டு பெண் போல் இருக்கிறார்..உருக்கமான காட்சியில் நடிப்பில் உறைய வைக்கிறார். நம்மையறியாமல், அவளை பிடித்து விடுகிறது.

நயனதாரா ... வெங்காய விலை ஏற்றத்தினால் பானிபூரி கடையில் கொஞ்சமாவது வெங்காயம் இருக்கும்..அந்த அளவுக்கு கூட நயந்துக்கு இதில் ஸ்கோப் இல்லை.. பக்கத்து shooting la இருந்து அப்படி
யே வந்த மாதிரி இருக்கு..

படத்தின் முக்கிய கதாபாத்திரம் ரஜினி டீமில் இருக்கும் பெண்போலீஸ்..மிக மிக சிறப்பு..
யோகி பாபு காமெடி கொத்துமல்லி

வில்லனாக வரும் சுனில்ஷெட்டி அதிர வைக்கிறார்.

படம் முழுக்க பயணித்திருப்பது ரஜினி ஸ்டைல், உணர்ச்சி (நிறைய closeup காட்சிகள்), அனல்தெறிக்கும் வசனங்கள்..

சண்டை க்காட்சிகள் சூப்பர்..

ஒளி வெள்ளத்தில் அருணாசலம் ஜொலிக்கிறார்.

நம்பிக்கையிருக்கரவனுக்கு வயசு ஒரு நம்பர் தான்
தலைவர் புரிய வைத்திருக்கிறார்.
படம்..சூப்பர்..


பொங்கலுக்கே வந்த தீபாவளி

அன்புடன்
நா.பிரசன்ன லக்ஷ்மி